Saturday, May 19, 2012

நான் போதையில் இல்லை..



நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முடிந்த பின்பு கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாலிவு நடிகர் ஷாருக் கான் மைதான பாதுகாவலர்களுடன் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இதனால் அவரை வாழ்நாள் முழுவதும் மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைய தடை விதித்து மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஷாருக் கான், தான் ஒன்றும் குடித்து விட்டு போதையில் தகராறு செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து ஷாருக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் போட்டியைப் பார்க்கவே செல்லவில்லை. போட்டியைக் காணச் சென்ற எனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லவே வான்கடே அரங்கிற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த வீரர்களை பாராட்டினேன். அப்போது அங்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அதிகாரிகள் பாதுகாப்பு என்ற பெயரில் எனது குழந்தைகளைப் பிடித்து தள்ளினர். அதைப் பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதுகாவலர்கள் தான் என்னிடம் மோசமாக நடந்தனர். நான் ஒன்றும் குடித்துவிட்டு ரகளை செய்யவில்லை.
குழந்தைகளைப் பிடித்து தள்ளினால் எந்த பெற்றோருக்குத் தான் கோபம் வராது. இப்படித் தான் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்றால் அந்த அரங்கிற்கே நான் செல்ல மாட்டேன். இந்த சம்பவத்திற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் தான் என்னிடம் மன்னிப்ப கேட்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment