Saturday, May 19, 2012

விசித்திரமாக அமைந்திருக்கும் நிலக்கீழ் நகரம்!


தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நகரம் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
Coober Pedy என்று அழைக்கப்படும் இந் நகரத்தில்வீடு, பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலை போன்றன காணப்படுகின்றன.
மிக மோசமான வெப்பத்தின் காரணத்தால் இந் நகரம் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இந் நகரில் அமைந்துள்ள வீடுகள் மூன்று படுக்கை அறைகள், குசினி, குளியலறை, பொழுது போக்கிடம் ஆகியவற்றை கொண்டனவாக அமைந்துள்ளன.
எந்நேரமும் இந் நகரம் குளிர்மையாக காணப்படுவதால் எயர் கண்டிஷன் வசதிகள் தேவை இல்லை.
இந்நகரத்தை பார்வையிட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வந்த வண்ணம் உள்ளார்கள்.

No comments:

Post a Comment