Friday, May 25, 2012

நடிகர் திலீப் (52) மரண அறிவித்தல்!


சென்னை, மே 25: திரைப்பட நடிகர் திலீப் (52) உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் வெள்ளிக்கிழமை காலமானார்.

நடிகர் திலீப் கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டதையடுத்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவர் காலமானார்.

கே.பாலசந்தர் இயக்கிய "வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் அறிமுகமான திலீப், "தூங்காதே தம்பி தூங்காதே", "வள்ளி', "சம்சாரம் அது மின்சாரம்', "பெண்மணி அவள் கண்மணி', "மாப்பிள்ளை' உள்பட தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 150 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கமல், ரஜினி உள்பட முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

விசு இயக்கிய பெரும்பாலான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார். திலீப்பின் உடலுக்கு பொதுமக்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கு மைசூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மறைந்த திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகள், மெüரியா (16) என்ற மகன் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment