Saturday, April 7, 2012

உலகமே புகழும் டைட்டானிக் பாடலை வெறுக்கும் கேட் வின்ஸ்லெட்.


Titanic heroine Kate Winslet disgust the Titanic song?

கலாச்சாரம் நிறைந்ததாக பசப்பும் நாடுகளான இலங்கை இந்தியாவில் கூட நிச்சயம் பண்ணப்பட்ட பெண் இன்னொருவனுடன் திருமணமின்றி உடலுறவில் மனம் விரும்பி ஈடுபடும் படமான டைடானிக் வெற்றிபெற்றது.கணவன் காதலன் கெட்டவனாக இருந்தால் அன்பால் திருத்தும் கலையை கொண்ட இந்நாட்டு வழமைகளை எல்லாம் பொய்யாக்கி இஸ்ரப்பட்டவனோடு கூடிக்குலவும் நம்மவரின் ஆசையை,குணத்தை படம்போட்டு காட்டிய படம்,ஆடவருக்கு பெண்கள் பற்றிய மாயையை உடைத்த படம் டைடானிக்.அப்படத்தில் பாடலே சிறப்பாக இருந்தது,நடிப்பு என்பது ஆங்கிலப்படங்களில் உடம்பை காட்டுவதும் உதடுகள் இணைவதும்தானே!!அப்பாடலே கதாநாயகிக்கு பிடிக்கலாம்,கதாநாயகன் உதடுகள்???
தனது பல வருட மன நெருக்கடியை இப்போது குமுறி தீர்த்திருக்கிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.
டைட்டானிக் படம் அளவுக்கு அப்படத்தின் புரோமோ பாடலான மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலும் உலகப் பிரசித்திப் பெற்றது. புகழ்பெற்ற பாடகி Celione Dioஇந்தப் பாடலைப் பாடியிருந்தார். உலகமே இந்தப் பாடலைக் கேட்டு காதலில் கசிந்துருகியது. ஒருவருக்கு மட்டும் இந்தப் பாடல் குமட்டலை தந்திருக்கிறது. அவர் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.
இந்தப் பாடலை எனக்கு கேட்கவே பிடிக்கவில்லை. எல்லோரும் அற்புதமான பாடல் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அதனை சகித்துக் கொண்டேன். அந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த உண்மையைச் சொன்னது நிம்மதியாக இருக்கிறது என்று வின்ஸ்லெட் வெம்பி தீர்த்திருக்கிறார்.

1912-
ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. அதன் நூறாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் 3டி-யில் வெளிவ‌ந்‌திரு‌க்‌கிறது. இந்த நேரத்தில் வின்லெட்டின் ஸ்டேட்மெண்ட் மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலின் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை தந்துள்ளது.

No comments:

Post a Comment