Wednesday, April 11, 2012

 இலங்கையில் பாரிய நிலநடுக்கம் !





இலங்கையில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிர்வு இணையதளத்துக்கு செய்திகள் கிடைக்கப்பட்டு உள்ளன.

இந்தோனேஷியாவின் மாத்ரா கடற் பிரதேசத்தில் புவி அதிர்வு ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளளது.

இன்று பிற்பகல் 2.10 அளவில் சுமாத்ரா கடற்பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 33 கிலோமீற்றர் ஆழத்தில் 8.9 ரிச்டர் அளவில் இந்த அனர்த்தம் பதிவானதான வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என்.டீ.தயானந்த தெரிவித்துள்ளார்.

இதனால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இலங்கையில் பிற்பகல் 4.10 அளவில் திருகோணமலையிலும், பிற்பகல் 4.50 அளவில் கொழும்பிலும், மாலை ஆறு மணிக்கு யாழ்ப்பாணத்திலும் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

நாட்டின் கிழக்கு மற்றும் தென் பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும் கடலுக்குச் சென்றிருப்பவர்களை கரைக்குத் திருதம்புமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2005 இந்தோனேசியாவில் 8 .4 ரிச்டர் அளவில் தாக்கிய சுனாமி இப்பொது 8 .9 ரிச்டர் அளவில் இந்தோனேசியாவில் தாக்கப்பட்டதாக அறியபடுகிறது.

இத்தாக்கமனது இன்னும் 40 நிமிடங்களில் இலங்கையை சுனாமி தாக்கும் என ரைட்டர் தெரியபடுத்தி உள்ளது.

இதுசம்பந்தமான மேலும் தகவல்களை பெற எம்முடன் தொடர்பில் இருங்கள்

No comments:

Post a Comment