Sunday, April 8, 2012

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்றவர்களை காட்டிக் கொடுப்போம்!!


போரைக்காரணம் காட்டி ஐரோப்பாவுக்குள் புகுந்தவர்களை காட்டிக் கொடுப்போம்; கங்கணம் கட்டி நிற்கும் அரசு

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்றவர்களை காட்டிக் கொடுப்போம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
போலியான ஆவணங்களையும் தகவல்களையும் தயாரித்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதுடன் அவர்களையும் காட்டிக் கொடுப்போம் என பாதுகாப்பு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் போர்ச் சூழலை முன்வைத்து போலியான தகவல்களையும், ஆவணங்களையும் தயாரித்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு சமர்ப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் அதே காலப்பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகத் தெரிவித்து போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தஞ்சமடைந்துள்ளவர்களது தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் குறித்த நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இவர்களது போலியான செயற்பாடுகளால் வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவது என்பது எமது நாட்டினுடைய பெயரையும் நன்மதிப்பையும் களங்கப்படுத்தவதாகவே அமையும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
http://lttenews.com/?p=3574

No comments:

Post a Comment