Wednesday, April 11, 2012

உலகின் மிகப் பழமையான சப்பாத்து கண்டுபிடிப்பு!


உலகின் மிகவும் பழசான ஷூ அர்மீனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வயது 5500 ஆண்டுகள். அதாவது எகிப்தின் முதல் பிரமிடை விட 1000 ஆண்டு முன்பே தயாரிக்கப்பட்டது.
மாட்டுத் தோலில் செய்யப்பட்ட இந்த ஷூவுக்கு லேஸ் உண்டு.வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது.
உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்துவிட்டோம். அது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது தான் தெரியவில்லை என்கிறார் அயர்லாந்தின் கார்க் பல்கலைக்கழக விஞ்ஞானி ரான்பின்யாசி.

No comments:

Post a Comment