Saturday, April 7, 2012

வாத்துகளை பாசமாக வளர்க்கும் கோழி !


வாத்து முட்டை என்று தெரியாமலேயே கோழி அடைகாத்தது. அதிலிருந்து வெளியேறிய வாத்துக் குஞ்சுகளோடு கோழி ஆசையோடு வலம் வருகிறது.
இங்கிலாந்தின் டார்சட் கவுன்டியில் உள்ள பூலே பகுதியில் பிலிப் பால்மர் என்பவர் பண்ணை வைத்திருக்கிறார்.
ஹில்டா என்ற பெயரிட்டு ஒரு கோழியை வளர்த்து வருகிறார். அது ஒரு மாதமாக 5 முட்டைகளை அடைகாத்து வந்தது. சமீபத்தில் அவை பொரிந்தன. 5 முட்டையில் இருந்தும் வெளியேறியது கோழிகள் அல்ல, வாத்துக் குஞ்சுகள்.
சிறிது நேரம் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த கோழி, அதன் பிறகு தனது குஞ்சுகளாகவே நினைத்து வாத்துக் குஞ்சுகளை அரவணைத்துக் கொண்டது.
பண்ணை முழுவதும் வாத்துக் குஞ்சுகள் கூடவே சுற்றித் திரிகிறது. வாத்துக் குஞ்சுகளுடன் கோழி பாசத்துடன் பழகுவதை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இதுபற்றி பால்மர் கூறுகையில், இப்போது வாத்துக் குஞ்சுகளும் கோழியும் ஒன்றாக சுற்றுவது பார்க்க அழகாக இருக்கிறது.
வாத்துக் குஞ்சுகள் நீந்த ஆரம்பிக்கும் வரை இந்த உறவு தொடரும். ஒருநாள் அவை ஓடையில் இறங்கும் போது, கோழி தயங்கி கரையில் நிற்கும். அப்போது தான் அவை இரண்டிற்கும் உண்மை புரியும் என்றார்.

No comments:

Post a Comment