Friday, April 13, 2012

ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்த தயாராண பிரித்தானிய போர் விமானத்தால் பரபரப்பு !


Sonic boom rocks large part of Britain as two Typhoon jets are despatched to helicopter emitting hijacking signal A large bang heard by hundreds across the country last night was a sonic boom caused by two Typhoon aircraft responding to an emergency, the Ministry of Defence said.
The RAF jets were despatched to a small civilian helicopter that had emitted an emergency signal on a frequency it should not have been using, but the error was realised too late. An MoD spokesman said the fighter planes had been authorised to go supersonic and were already on their way to the helicopter.


நேற்றைய தினம் மாலை 6.10 மணியளவில், பிரித்தானியாவின் பல பாகங்களில் உள்ள மக்கள் 2 சூப்பர் சோனிக் விமானங்கள் பறக்கும் சத்தத்தை கேட்டிருப்பர். இவ்விமானங்கள் இரண்டும் சூப்பர் சோனிக் வேகத்தில்(மிகையொலி) சென்றதால் பெரும் இரச்சல் மற்றும் முழக்கச் சத்தம் கேட்டது. இந்த விமானங்கள் பிரித்தானிய நகரப் பகுதிக்கு மேல் மிகையொலி வேகத்தில் செல்ல காரணம் என்ன என்பதனை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதாவது நேற்றைய தினம் மாலை 6.00 மணியளவில், லண்டன் வான்பரப்பில் பறந்த சாதாரண ஹெலிகொப்டர் ஒன்று இரகசிய சமிஞ்சை ஒன்றை அனுப்பியுள்ளதாம்.

பொதுவாக விமானம் கடத்தப்பட்டால் இந்த சமிஞ்சை அனுப்பப்படுவது வழக்கம். இந்த சமிஞ்சையை(சிக்னல்) அந்த விமானி தவறுதலாக அனுப்பிவிட்டார். இருப்பினும் குறிப்பிட்ட அந்த ஹெலிகொப்டர் கடத்தப்பட்டிருக்கலாம், அதனைப் பாவித்து தீவிரவாதிகள் கட்டிடங்களை தகர்க்கலாம் என்ற அச்சத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன் பிரகாரம் சாதாரண வேகத்தில் செல்லவேண்டிய, இந்தப் போர் விமானங்கள் மிகையொலி வேகத்தில் சென்றுள்ளன. (மிகையொலி என்று அழைக்கப்படுவது ஒலி செல்லும் வேகத்தைக் காட்டிலும் அதிவேகம் கொண்டது)

ஒரு சில நிமிடங்களில், ஹெலிகொப்டர் பறந்துகொண்டு இருக்கும் இடத்தை அடைந்த இவ்விரு போர்விமானங்களும், ஹெலிகொப்டர் விமானியுடன் ரேடியோவில் உரையாடி பாதுகாப்பை உறுதிப்படுத்தினர். இதன்பின்னரே அந்த ஹெலிகொப்டர் தொடர்ந்து தனது திசையில் பறக்க அனுமதிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானிய அரசு தனது வான்பரப்பை கடுமையாக பாதுகாத்துவருகிறது. பின்லேடன் அமெரிக்காவைத் தாக்கியதுபோல ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதில் அது அக்கறையாக உள்ளது போலும் !


No comments:

Post a Comment