Saturday, April 28, 2012

உயிராபத்து என அகதி தஞ்சம் கோரியவர்கள் விடுமுறையை கழிக்க இலங்கை செல்கின்றனர்!



இலங்கையில் தமக்கு உயிர் ஆபத்து என கூறி கனடா, ஒஸ்ரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அகதி தஞ்சம் கோரி அந்த நாடுகளில் குடியேறியவர்களில் சுமார் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
கனடா, ஒஸ்ரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் தமிழர்கள் 5 வருடங்களில் அந்தந்த நாட்டு குடியுரிமையை பெறுகின்றனர். அல்லது பி.ஆர். எனப்படும் நிரந்தர வதிவிட உரிமையை பெற்று சிறிலங்கா கடவுச்சீட்டை பெறுகின்றனர்.
5வருடங்களுக்கு முதல் தமக்கும் தமது குடும்பத்திற்கும் பெரும் உயிராபத்து என கூறியவர்கள் அந்தந்த நாட்டு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த உடன் அந்த உயிராபத்து நீங்கி தமது விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு செல்கின்றனர்.
உறவினர்களை பார்வையிடுவது, சொத்துக்களை கொள்வனவு செய்வது, சொத்துக்களை பராமரிப்பது, வேலிச்சண்டை போடுவது, சுற்றுலா செல்வது என்ற நோக்கங்களுக்காக இவர்கள் இலங்கைக்கு செல்கின்றனர். வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி கதிர்காமம், போன்ற சிங்களவர்கள் வாழும் இடங்களுக்கும் சென்று உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து செல்லும் தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு சென்று போடும் ஆட்டங்களை காணும் வடக்கு கிழக்கு இளைஞர்கள் தாமும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என இலட்சக்கணக்கான பணத்தை முகவர்களுக்கு கொடுத்து மலேசியா, ஆபிரிக்க நாடுகளை பார்த்து விட்டு திரும்புபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவுக்கு செல்வதற்காக 35 இலட்சம் ரூபா பணத்தை முகவர் ஒருவருக்கு கொடுத்து ஆபிரிக்க நாட்டை பார்த்து விட்டு நாடு திரும்பியுள்ளார்.
சில காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானச்சேவை மீண்டும் சுவிஸிற்கு தனது சேவையை ஆரம்பித்திருப்பது தெரிந்ததே. இந்த விமான சேவையில் கடந்த ஜனவரி மாதத்திலேயே செப்டம்பர் மாதம் வரை ஆசனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அந்த விமான சேவைக்கு பொறுப்பாக இருக்கும் சுவிஸ் முகவர் தெரிவித்திருக்கிறார். சிறிலங்கன் விமானச் சேவையில் பதிவு செய்தவர்களில் 99வீதமானவர்கள் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment