Thursday, March 8, 2012

பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல் !


பூமியை மிக விரைவில் பாரிய சூர்யப்புயல் தாக்கவிருப்பதால், மின்கட்டமைப்புக்கள், செய்மதிகள் மற்றும் விமானப் பாதைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கிறின் வீச் நேரம் 6 தொடக்கம் 10 மணிக்குள் பூமியை இந்த சூரியப் புயல் தாக்கலாம் என அமெரிக்க காலநிலை விசேட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் சூரியனில் இருந்து வெளியான ஒளிக்கீற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் உள்ளவர்கள் இன்று இரவு இதனை பார்க்கக்கூடிய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ஆய்வு நிலையம் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில் இதனைத் தெளிவாக அவதானிக்க முடியும் எனவும் இதன் விளைவுகள் துருவப் பிரதேசங்களின் மிகவும் அதிகமான பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் விமான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment