Saturday, March 17, 2012

சுயதொழில் பயிற்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள்!


வன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போரளிகள் புனர்வாழ்வு முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயம்.
அந்த வகையில், வவுனியா பூந்தோட்டத்தில் நீண்ட நாட்களாகவே முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம் இயங்கி வருகின்றது. குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பெண் பேராளிகளுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் முன்னாள் போராளிகள் ஆர்வமுடன் கலந்துக் கொள்வதைக் காண முடிகிறது. வவுனியாவில் குறித்த முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு பொறுப்பாக உள்ள கேணல் மஞ்சுள குணசிங்க இது தொர்பில் கருத்து வெளியிடுகையில்,
புனர்வாழ்வு முகாம்களில், புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகளில் இது வரை பத்தாயிரத்து நானூற்று பத்தொன்பது பேர் இது வரை விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்
இருந்த போதிலும், இவ்வாறு புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு தொழில் வழங்க தமிழ் சமூகம் தயங்கி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பின்றி கஸ்டப்படுவதை காணக் கூடியவாறு உள்ளது.
பெரும்பாலான முன்னாள் போராளிகள் அரபு நாடுகள் போன்ற எண்ணெய்வள நாடுகளுக்கு குறைந்த அளவிலான சம்பளத்திற்கு வேலைக்கு செல்வதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

No comments:

Post a Comment