Wednesday, March 21, 2012

வெட்டிய மரத்திற்குள் காணப்பட்ட வேற்றுக்கிரகவாசி உருவம்!


கென் டாப்சன்(80) எனும் வயோதிபர் அண்மையில் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு தனது தோட்டத்தில் உள்ள மரத்தினை வெட்டிய போது அதனுள் வேற்றுக்கிரகவாசியின் உருவம் தென்பட்டுள்ளதாக குறிப்பிட்டள்ளார்.
இதுகுறித்து கென் டாப்சன் குறிப்பிடுகையில், எனது தோட்டத்தில் வளர்ந்திருந்த இந்த மரத்தை வெட்டவேண்டும் என நானும், எனது மனைவி ஜேனட் ம் பல வருடங்களாக திட்டமிட்டு வந்தும் இது தடைபட்டு போனது.
தற்போது இந்த மரத்தை நான் வெட்டியதும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் மரத்தின் நடுப்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் முகசாயல் உருவம் காணப்படுகிறது. இதனைக்கண்ட எனது மனைவியும் பெரிதும் ஆச்சரியப்பட்டார்.
விறகு எரிப்பதற்காக வெட்டிய இம்மரத்தில் வித்தியாசமாக உருவம் காணப்படுவதால் நாங்கள் இதை விறகு எரிப்பதற்கு பயன்படுத்தப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment