Thursday, March 29, 2012

ஒருங்கிணைந்த ஆசிரியர் இடமாற்ற திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு!


தேசிய பாடசாலைகள் மற்றும் 1000 இடைநிலை பாடசாலைகளில் ஒருங்கிணைந்த ஆசிரியர் இடமாற்ற திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

கல்வி அமைச்சர் இதுகுறித்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

தற்போதைய கொள்கைபடி 8 வருடங்கள் நீண்ட சேவையில் இருக்கும் மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. 

எனினும் நாடு முழுவதும் உள்ள 342 தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு ஒரு முறையே ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்படுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கல்வி அமைச்சின் கீழ் உள்ள 342 தேசிய பாடசாலைகள் மற்றும் 1000 இடைநிலை பாடசாலைகள் என்பவற்றை ஒன்றிணைத்து ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. 

No comments:

Post a Comment