Thursday, March 8, 2012

இழந்த கைகளை மீண்டும் பெற வினோதமான சிசிச்சையை மேற்கொண்டுள்ள மனிதர் !


இன்றைய உலகில் விஞ்ஞானம் நொடிக்கு ஒரு வளர்ச்சியை சாதித்துக் கொண்டே செல்வதை எடுத்துரைக்க Southern Germany-யைச் சேர்ந்தவர் Karl Merk என்பவரின் சத்திரசிகிச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவர் விவசாயி ஆவார். கடந்த 2002ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது இரு கைகளையும் இழந்து, சிகிச்சை பலனின்றி கைவிடப்பட்ட இவர் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இவரின் கைகளை இணைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இறங்கினர்.
மேலும் Karl Merk-ன் கைகளை பொருத்தும் சத்திரசிகிச்சை முயற்சியில் 40 பேர் கொண்ட மருத்துவக்குழு ஈடுபட்டுள்ளது. சுமார் 15 மணித்தியால, கடும் போராட்டத்தின் மத்தியில் இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டடு விஞ்ஞான உலகத்தில் சாதனை நிகழ்த்தப்பட்டது.
தற்போது இவர் சாதாரண மனிதர்களின் கைகளைக் கொண்டவராக காணப்படுகிறார். உலகத்திலேயே இவர் ஒருவரே இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதலாவது மனிதர் ஆவார்.

No comments:

Post a Comment