Monday, March 26, 2012

இன்று மதுபாலா பிறந்தநாள்!


மதுபாலா: ஹாப்பி பர்த்த்டே டு மதுபாலா...ஜி:

1992ம் ஆண்டு திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மதுபாலா. கவிப்பேரரசு வைரமுத்துவால் எழுதப்பட்டு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானால் இசையமைக்கப்பட்டு, சின்னக்குயில் சித்ராவின் பின்னணியில், இவர் பாடும் "சின்ன சின்ன ஆசை",பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ஜென்டில்மேன், அழகன், வானமே எல்லை போன்ரவை குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்கள். 

மலையாளம், இந்தி, தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள, மதுபாலா அவர்களுக்கு, பழம்பெரும் இந்தி நடிகை நினைவாக பெற்றோர் பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா,மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ப் அலி கான், நானா படேகர், எனப் பல பிரபல நடிகர்களுடன் ஹீரோயினாக‌ நடித்துள்ளார் மதுபாலா என்பதை நாம் அறிவோம்.



மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தியில், அஜய் தேவ்கன்னுடன் நடித்த "பூல் அவுர் கான்ட்டே" என்ற திரைப்படம் அறிமுகப் படம். 1999ம் ஆண்டில் ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டு, அமேயா, கீயா என்ற 2 பெண் குழந்தைகளுக்கு தாயானார். செளந்திரவல்லி மெகா தொடரின் மூலம் டி.வி.சீரியலில் பிரபலமானார்.

இன்று நடிகை மதுபாலாவுக்கு 42 வயது.

No comments:

Post a Comment