Monday, March 12, 2012

நிலநடுக்கங்​களின்போது கட்டிடங்களை பாதுகாக்க புதிய பொறிமுறை !


நிலநடுக்கம் ஏற்படும்போது புவித்தட்டுக்களில் ஏற்படும் விரிசல்களினால் கட்டிடங்கள் சேதத்திற்கு உள்ளாவதுண்டு.
புவித்தட்டுக்களில் ஏற்படும் விரிசல்களினால் கட்டிடங்கள் சேதத்திற்கு உள்ளாவதுண்டு.
 தற்போது இவ்வாறான அனர்த்தத்தின்போது கட்டிடங்களை பாதுகாக்க ஜப்பானின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று Air Danshin என்ற எயார் லிப்ட்டை வடிவமைத்துள்ளது.
அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களைப்பற்றி சிந்தித்த ஜப்பானியரான சொய்ச்சி சக்காமோடோ என்பவரின் முன்மொழிவிலேயே இந்த லிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த லிப்ட் ஆனாது நிலநடுக்கத்தை வெறும் 0.5ல் இருந்து 1 செக்கன்களுக்குள் அறிந்து கொள்வதுடன் அவ்வாறு அறிந்ததும் கட்டிடங்களை நில மட்டத்திலிருந்து 3 சென்டிமீட்டர்கள் அளவிற்கு உயர்த்திவைத்திருக்கவல்லது இதனால் அவை சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment