Thursday, March 8, 2012

லீப் தினத்தில் தனது 3 குழந்தைகளின் பிறந்த தினத்தை அனுசரித்த அமெரிக்க பெண் 1


4 ஆண்டிற்கு ஒருமுறை 366 நாட்களைக் கொண்டு வரும் ஆண்டு லீப் ஆண்டாகும். மற்ற ஆண்டுகளில் 365 நாட்கள் காணப்படும். இந்த லீப் ஆண்டில் வரும் பெப்ரவரி 29ம் திகதியை லீப் தினம் என்று அழைப்பர்.
அமெரிக்காவின் உடா மாநிலம் புரோவோ பகுதியில் வசிக்கும் தம்பதி டேவிட் - லூயிஸ் எஸ்டஸ். இவருக்கு கடந்த பிப்ரவரி 29ம் திகதி ஜேட் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.
மேலும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இவர்களும் லீப் ஆண்டான 2004, 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ம் திகதி பிறந்து தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
இவரின் தொடர்ச்சியாக 3 குழந்தைகளும் லீப் ஆண்டில் பெப்ரவரி 29ம் திகதியில் பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
இதே போன்ற ஏற்கனவே நார்வே நாட்டில் கடந்த 1960ம் ஆண்டில் ஹென்ரிக்சன் என்பவர் தனது 3 குழந்தைகளின் பிறந்ததினத்தை லீப் ஆண்டிலே கொண்டாடி வருகிறார். தற்போது அந்த சாதனையை எஸ்டஸ் சமன் செய்துள்ளார்.

No comments:

Post a Comment