Friday, March 23, 2012

10 பவுன்களைக் கொடுத்து 1லட்சம் பவுன்களை சுருட்டிய பெருமைக்குரிய தமிழ்குடும்பம்!!


இப்படியும் நடக்குமா என்று எண்ணும் அளவுக்கு ஒரு விடையம் நடந்திருக்கு ! சரி வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !



அப் பற்றுச் சீட்டையும் அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் நேஷனல் லாட்டரி முகவர்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக இவ்விருவரின் பெயரில் கடை இருப்பதும், அங்கே நேஷனல் லாட்டரி இயந்திரம் இவர்கள் பெயரில் பதிவாகி இருந்ததும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இவர்கள் அனுப்பி வைத்த பற்றுச் சீட்டு இவர்கள் கடையில் போடப்படவில்லை. அது பிறிதொரு கடையில் போடப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் மாட்டிக் கொண்டனர். நீங்கள் தான் இந்த நேஷனல் லாட்டரியைப் போட்டீர்கள் என்றால், எந்தக் கடையில் போட்டீர்கள் எனப் பொலிசார் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜீவராஜா மற்றும் அவர் மனைவியால் சரியான பதிலைக் கூற முடியவில்லை.

அவர்கள் இருவரும் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவருக்கும் சுமார் 14 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த வயதான (டேவிஸ்) தாத்தாவைப் பொலிசார் தேடிக் கண்டுபிடித்து அப் பணத்தை ஒப்படைத்துள்ளனர். இவ்விருவருக்குமேல் தொடுக்கப்பட்ட வழக்கை அவதானித்து வந்த டேவிஸ் தாத்தா தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் என்ன தெரிவித்துள்ளார் தெரியுமா ? நான் அல்பிரட் ஜீவராஜா மற்றும் அவர் மனைவியை மன்னித்துவிட்டேன் என்று .... இவர்கள் கடையின் வாடிக்கையாளர் தான் என்றும் அவர்கள் தன்னை ஏமாற்ற நினைத்ததை தான் மறந்துவிட்டேன் மற்றும் மன்னித்துவிட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2069 

No comments:

Post a Comment