Saturday, February 25, 2012

அதிர்ந்து குலுங்கி உடையும் ஹெலிகொப்டர்!



பிரேஸில் நாட்டில் மீட்புப்பணியில் ஈடுபட்ட சிறிய ரகக் ஹெலிகொப்டர் ஒன்று தரை இறங்கும் போது அதிர்ந்து குலுங்கியபடி உடையும் அதிர்ச்சிக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
முன்பக்கக் கதவு, மேலே இருக்கும் சுழல் விசிறி போன்றன குலுங்கிக் குலுங்கி துண்டு துண்டாக உடைந்து போய் விடுகின்றன.
மீட்புக் குழுவினர் தான் இந்தக் காட்சிகளை வீடியோப் படம் பிடித்துள்ளார்கள்.
ஹெலிகொப்டரைச் செலுத்திய விமானி ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக பிரேசிலின் விமான விபத்து விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment