Friday, February 24, 2012

விலையேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஷிராந்தி ராஜபக்சவை இணையுமாறு பெண்கள் அமைப்பு அழைப்பு!


எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான தமது போராட்டத்தில் முதல் பெண்மணியான ஷிராந்தி ராஜபக்சவை இணையுமாறு பெண்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இப்பெண்கள் அமைப்பானது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஆகியோருடன் இன்னும் பல பெண்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அமைப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான தமது போராட்டத்தில் முதல் பெண்மணியான ஷிராந்தி ராஜபக்ஷவை இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
தமது அரசியல், சமயம், இனம் என்பவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு பெண்ணும் இந்த இயக்கத்தில் சேரவேண்டுமென இந்த இயக்கத்தின் தலைவியான விசாக தர்மதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.
சடுதியான இந்த விலை அதிகரிப்புகள் மக்கள் வயிற்றிலடிப்பதாகும் என அனோமா பொன்சேகா கூறினார்.
தனது கணவனின் ஓய்வூதியம் பறிக்கப்பட்டுள்ளதால் தனக்கு வருமானம் ஏதும் இல்லையெனவும் இதனால் வாழ்க்கை செலவு அதிகரிப்பின் நெருக்குவாரத்தை தன்னால் விளங்க முடிகின்றது என அவர் கூறினார்.
மண்ணெண்ணெய் விலையேற்றம் பற்றி கடல்தொழிலாளர்களின் மனைவியர்கள் என்னிடம் கூறியபோது அவர்களின் சோகத்தை என்னால் காணமுடிந்தது.
நாம் ஏன் அமைதியாக இருக்கின்றோம். நாம் துணிந்து பேச வேண்டிய காலம் வந்துவிட்டது' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment