Monday, January 30, 2012

குத்துச்சண்டை வீரனை எதற்காக சந்தித்தார் மஹிந்த?-tamilwin



முன்னாள் உலக குத்தச்சண்டை சாம்பியன் ஏவாண்டா ஹொலிபீல்டுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் கீழ் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல், கடத்தல், காணாமல் போதல் என மும்முரமாக தலைவிரித்தாடும் இந்நிலையில் எதற்காக குத்துச்சண்டை சாம்பியனை மகிந்த சந்தித்தார் என அமைச்சினர் குழம்பிப்போயுள்ளனர்.
கிரீஸ் பூதம் என்ற போர்வையில் மக்களைக் கலக்கிய காலம் முடிந்து, குத்துச் சண்டை வீரரும் நாட்டில் உருவாகப்போகின்றனரா என குழம்பிப் போயுள்ளது மஹிந்தவின் இந்த சந்திப்பு எது தொடர்பானது என தெரியாத அமைச்சினர்.
1997 ஜூன் 28ஆம் திகதி இடம்பெற்ற உலக சம்பியன் பட்டத்துக்கான போட்டியின் போது மைக் டைசனால் கடித்துத் துண்டாக்கப்பட்ட ஹொலிபீல்டின் காதை ஜனாதிபதி இச்ந்திப்பின் போது தொட்டுத் தடவிப் பார்த்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் கே.ஏ.போல் ஏ கிறிஸ்டியனும் அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி இருவருடனான சந்திப்பின் போது கலந்துகொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment