Monday, January 30, 2012

மேற்கு ஆபிரிக்க நாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு சித்திரவதை-tamilwin.



[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 10:33.52 PM GMT ]
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக இவர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தவுமுள்ளது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் என்று கருதப்படும் இந்த மக்கள் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் தங்கி இருந்து வேறு நாட்டிற்கு சென்றால் அவர்கள் சிறீலங்கா அரசின் போர்குற்றங்களையும் தற்போது நடக்கும் நிலமைகளையும் அறிவித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் அந்நாட்டு அரசுடன் சிறீலங்கா அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 200 ஈழத்தமிழர்களையும் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் கட்டாய நடவடிக்கையில் அங்குள்ள அதிகாரிகளும் அந்நாட்டு அரசும் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மக்களில் பன்னாட்டு மனிதஉரிமை நீதிக்கும் சட்டத்திற்கும் மாறாக அந்நாட்டு அரசாங்கமும் அதிகாரிகளும் நடந்துகொள்கின்றார்கள் அனைவரையும் சிறீலங்கா செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்கள் 3 பேரை கைதுசெய்து நிர்வாணப்படுத்தி சிறையில் அடைத்து சித்திரவதைசெய்வதுடன் அவர்களைபோல் ஏனையவர்களுகம் நாடுசெல்ல எதிர்ப்பு தெரிவித்தால் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
டோகோ பகுதியில் கைதுசெய்யப்பட்ட 200 ஈழத்தமிழர்களை விளையாட்டு திடலில் நுளம்புவலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். எதுவித மனிதநேய நிறுவனங்களும் தொடர்புகொள்ளாத வகையில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொடர்பாடல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் சித்திரவதைகளை மேற்கொள்கின்றார்கள்.
சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக இவ்வாறான சித்திரவதைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த மக்களை மீட்க மனிதநேய அமைப்புக்கள் முன்வரவேண்டும் என்று கைதுசெய்யப்படடு சித்திரவதைக்குள்ளாகிய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment