Saturday, January 28, 2012

உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!



சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம்.


பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்

  • புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
  • நெற்றியின் வலது புறம் – தனயோகம் 
  • வலது புருவம் – மனைவியால் யோகம்
  • வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
  • வலது கண் – நண்பர்களால் உயர்வு
  • வலது கண் வெண்படலம் – புகழ் ஆன்மீக நாட்டம்
  • இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
  • மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
  • மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
  • மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
  • மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
  • மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
  • மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
  • வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
  • இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
  • வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
  • இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
  • காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
  • தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
  • கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
  • இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
  • வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
  • வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
  • அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

பெண்களுக்கான பலனகள்
  • நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
  • நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
  • நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
  • மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
  • மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
  • மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
  • மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
  • மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
  • இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
  • வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
  • வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
  • நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
  • கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
  • இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
  • தலை – பேராசை, பொறாமை குணம்
  • தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
  • தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
  • தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
  • வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
  • அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
  • இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
  • வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.

No comments:

Post a Comment