Sunday, January 29, 2012

தாங்கள் சுரண்டுவதை மறக்க பண்டைய வானவியலை பரிகாசிக்கும் சினிமா!!


இவர்களுக்கு வளர்ந்துவரும் விஞ்ஞானம் எவ்வளவு தரவுகளை கொடுத்தாலும் அதை படித்தறியும் ஆற்றலில்லை,நாஸ்தீகப் போர்வையில் மக்களை சாத்திரங்கள்  பக்கம் திருப்பிவிட்டு கலாச்சார அழிவை மிக நேர்த்தியாக செய்கின்றனர்.இவர்கள் உண்மையானவரானால் பண்டைய விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.வியாபாரம் மட்டுமே நோக்காக கொண்டு இன்றைய இளையோர் எதை வெறுக்கிறார்களோ அவற்றை மூடத்தனம் என்று சொல்லி,அவர்கள் விரும்புபவற்றை அறிவியல் என்று சொல்லியும் அழிவுக்கு அத்திவாரத்தை அழகாக போட்டு அதில் கட்டிடமும் கட்டிவிட்டனர்!!நாளைய திரை நீலமாகவே வரும்,அதில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க படிக்காத இயக்குனர்கள் புறப்பட்டுள்ளனர்.சிறுசுகளை தரமற்ற கேடுகெட்ட வார்த்தைகளை பேசச்சொல்லி காசு கொடுத்து வளர்க்கும் இவர்கள் கண்டிப்பது என்றோ மறைந்துபோன சத்திரக்கலையை!!சிறந்த ஊக்குவிப்பில்லாமல் அழிந்த கலைகளுள் இன்னமும் அரைகுறையாக இருப்பவற்றில் இதுவும் ஒன்று.அவற்றை ஆராய்ந்து வளர்ப்பதை விட்டுவிட்டு அழிக்கும் இவர்கள் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட அவற்றை அறிவியலாம்.பேயர்கள்!!ஆமை புகுந்த வீடு விளங்காது என்பதை நக்கலடித்த அதி புத்திசாலிகளல்லவா!!!

No comments:

Post a Comment