Monday, January 30, 2012

தனிமையின் பிடியில்


தனிமையின் பிடியில்
இனிமைகள் தொலைந்து
பாலைவனமான வாழ்கையில்
பாசம் எனும் உணவுக்கு
வறுமையில் வாடும் போது
சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.
அன்பினை அமிர்தமாய் அளித்து
ஆசைகளை இனம் காண வைத்து
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..
காலங்களும் இனிமையாய் கழிய
காதலும் நம்முள் தோன்ற
பாலைவன வாழ்கை
சோலைவனங்களாக மாற
பட்டாம்பூச்சிகள் எனை சூழ
காதலில் திழைக்க வைத்த
உன்னத உறவு ஒன்று.
காதலையும் படைத்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைத்தாரே என்னமோ
பருவங்களில் மாற்றம் வைத்த – கடவுள்
காதலிலும் புரட்சி செய்தாரோ?
இனிமைகளின் உணர்வுக்குள்
பிரிவின் வலிகள் ஒளித்திருப்பதை
அன்று அறிந்திருக்கவில்லை
இப் பேதை இதயம்..
இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக – மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்…..

No comments:

Post a Comment