Friday, December 9, 2011

படமொன்றுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கிறார்களாம் புலன் பெயர்ந்த தமிழரும் ஈழத்தமிழரும் உணர்ச்சிக்காசியின் ஆனந்தமான கடி!!

புலம்பெயர் மக்களும் தமிழீழ மக்களும் தமிழகத்திற்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கின்றார்கள்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இதெந்த ஊர் நியாயமுங்க,பிடித்த படத்தை காசு கொடுத்துத் தானே பார்க்கமுடியும்!!கூலி இல்லாமல் யாராவது வேலை செய்வாங்களா?நன்கொடையாக திரையுலகுக்கு புலம்பெயர்ந்தவரும் இலங்கைத் தமிழரும் பணம் கொடுத்தது போலல்லவா அண்ணன் பேச்சு இருக்கிறது!!செய்த வேலைக்கு கூலிமட்டும் கொடுத்திட்ட்டு கொடுத்திட்டோம் கொடுத்திட்டோம் என்றால் என்ன அர்த்தம்??கேட்கிறவன் கேனை என்றால் KPசுந்தரம்பாள் 3 இல் பாடுகிறா என்பீர்கள் போலும்!!சாப்பாட்டுக்கடையிலும் இப்படித்தான் பேசுவாரோ??
இலங்கையில் படையினரால் பாலியல் வதைக்குட்படுத்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த புனிதவதியென்ற சிறுமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  திரைப்படமே உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படம்  ஆகும்.
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு பாடல்களை எழுதிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் திரைப்படம் தொடர்பில் கருத்துக் தெரிவிக்கையில் நான் எழுதிய பாடல்களை இலங்கை தடை செய்யும் என்று தெரிவித்தார்.
இலங்கையரசு 90 ஆயிரம் பெண்களை விதவைகள் ஆக்கியதுடன் ஏறக்குறைய ஐந்து ஆயிரம் தொடக்கம் பத்தாயிரம் பெண்களை பாலியல் வல்லுறக்குட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
தமிழீழ மக்களும் புலம்பெயர் மக்களும் தமிழக திரைப்படங்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். எனவே தமிழக சினிமா தமிழீழ மக்களுக்கு கடமை பட்டிருக்கின்றார்கள் எனவே பல திரைப்படங்கள் தமிழீழ மக்கள் தொடர்பில் வெளிவர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment