Sunday, November 20, 2011

இந்தியாவின் சமஸ்டி முறையை பாராட்டியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ்

[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011, 01:34.28 AM GMT ]
இந்தியா,சமஸ்டி முறையில் இனங்களை நிர்வகிக்கும் முறை குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அபிவிருத்தி, மற்றும் ஜனநாயக பண்புகள், இனங்களுக்கு இடையிலான பகிர்வுகள் என்பவற்றை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சியாம் சரணின் சொற்பொழிவு இந்திய இலங்கை நிதியத்தில் இடம்பெற்றபோது பீரிஸ் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
ஜி எல் பீரிஸ், இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஸ்டி முறையில் அமையவேண்டும் என்று எண்ணத்தை கொண்டிருந்தார். எனினும் இலங்கையில் சமஸ்டி என்பது தனிநாட்டுக்கு ஈடானது என்ற சிங்கள தேசியவாதிகளின் கருத்துக்களால் அந்த கொள்கையை இலங்கை அரசாங்கம் கைவிட்டது.
இதனைடுத்தே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்ளுர் தீர்வு தேவை என்று கோட்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உச்சரிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment