Friday, November 11, 2011

ஐரோப்பிய ஒன்றியம் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் !

கடந்த வாரம் கிரேக்கம் இந்தவாரம் இத்தாலி. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இத்தாலி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது. இத்தாலியில் பல் தேசிய வியாபாரியும் தற்போது வெளியேறும் பிரதமருமான சில்வியோ பொலஸ்கோனி உட்பட பெரு நிறுவன முதலாளிகள் சொத்துக்க்ளைக் குவித்து வைத்திருக்கும் நிலையில் இத்தாலியின் கடன் தொகை மட்டும் 110 பில்லியன் யூரோக்கள் ஆகும். இந்தப் பணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த ஜீ.டிபி தொகையை விட 1.2 மடங்கு அதிகமானதாகும். இத்தாலியின் முன்னைய கம்யூனிஸ்ட் கட்சியான தற்போதைய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளது. இத்தாலியின் இன்னொரு வலது சாரிக் கட்சியான ஜனநாயக் கட்சி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாள் கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து ஏனைய மேற்கு நாடுகள் அழிவையும் போராட்டங்களையும் எதிர் நோக்குகின்றன. தோல்வியை சீரமைப்பதற்கு இந்த நாடுகள் மேலும் யுத்தங்களைக் கட்டவிழ்த்து விடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment