Sunday, November 13, 2011

இத்தாலியில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஈழத்துப் பெண்

பலேர்மோ மாநகரத்தின் மருத்துவத்துறையின் ஓர் பிரிவான Tecniche di Radiologia Medica per immagini e Radioterapia வில் அதிக புள்ளியான 110/110 lode பெற்று மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தான் இத்தாலியில் தமிழ் மாணவர்களுக்கு நடனம், தமிழ் மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைக் கற்பித்து வருவதுடன், தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான சேவைகளை ஆற்றவுள்ளதாகவும் எமது செய்திச் சேவைக்கு ஞானசீலன் பிரியா தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் அங்கு உணவகங்களிலும், கடைகளிலும், வீடுகளிலும் வேலை செய்து தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் நிலையில் இப் பெண்ணின் சாதனை மிகப் பெரிய சாதனையாகவே அமைந்துள்ளது.
தமிழ் மக்களின் ஒரேயொரு மூலதனமான கல்வி புலம்பெயர் நாடுகளிலும் புகுந்து சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றது என்பதற்கு ஞானசீலன் பிரியா ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment