Thursday, November 3, 2011

7billion

பிறந்தது உலகின் ஏழு பில்லியனாவது குழந்தை!


உலக சனத்தொகை இன்றுடன் ஏழு பில்லியனானது. உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த பெண் குழந்தைக்கு Danica என்று பெயரிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள Jose Fabella Memorial மருத்துவமனையில் தான் மேற்படி குழந்தை பிறந்துள்ளதாக ஐக்கியநாடுகள் சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தாயாரான Camille க்கும் தந்தையாரான Florante க்கும் "7B Philippines" என்று பொறிக்கப்பட்ட பிறந்தநாள் கேக் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதிஷ்டக்காரத் தம்பதிக்கு இது இரண்டாவது குழந்தை ஆகும்.
குழந்தையின் தாயார் மகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவிக்கையில்,
பிறந்த உடனே அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாள். எங்களது குழந்தை உலகின் ஏழு பில்லியனாவது குழந்தை என்பதை நம்ப முடியவில்லை.

குழந்தைக்கு வரவுள்ள நன்கொடைகள், காசோலைகள், அன்பளிப்பு பொருட்களைப் பாதுகாப்பதற்கு பெற்றோர் இப்போதே தயாராகி விட்டனர்.
குழந்தையின் பெயரான Danica என்பதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? "Morning Star " விடி வெள்ளி.
இதே போல 1999 ஆம் ஆண்டும் 6 பில்லியனாவது குழந்தையாக Lorrize Mae Guevarra என்ற சிறுவன் ஐக்கியநாடுகள் சபையால் அடையாளப்படுத்தப்பட்டான். இப்பொழுது அவனுக்கு 12 வயது ஆகின்றது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கீ மூன் கடந்த வார இறுதியில் கருத்து தெரிவிக்கையில்,
பிறக்கப்போவது ஆணோ, பெண்ணோ ஆனால் முரண்பாடுள்ள உலகத்தில் தான் பிறப்பு நிகழப் போகிறது.
உணவு ஏராளமாய் கிடைத்தும், இன்றும் பில்லியன் கணக்கான மக்கள் இரவு படுக்கப் போகும் போது பட்டினியுடனும், வெறு வயிற்றுடனும் தான் செல்கின்றனர்.
நிறைய மக்கள் ஆடம்பரத்திலும் சுகபோகத்திலும் திளைக்கின்றனர். இன்னமும் ஏராளமானோர் தொடர்ந்தும் வறுமையில் உழலுகின்றனர்.




No comments:

Post a Comment