Tuesday, November 15, 2011

50 ஆண்டாக மானுடத்தை குரலால் அடிமையாக்கிய சாதனையாளன்

கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி. பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துலு, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட 14 மொழிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் மத்திய அரசின் விருது பெற்றுள்ளார்.
திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார்.
இவரது புகழினை பரப்பும் வகையில் இவரது இளையமகன் விஜய் யேசுதாஸ் புகழ்பெற்ற பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார்.

No comments:

Post a Comment