Monday, November 7, 2011

சுவிட்சர்லாந் அகரன் திலீபன் 02-11-2011 புதன்கிழமை அன்று அகாலமரணம்


சுவிஸில் பாடசாலை சென்ற இலங்கைச் சிறுவன் லொறி மோதி பரிதாபச் சாவு!

அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 2003 ,
ஆண்டவன் அடியில் : 2 நவம்பர் 2011
சுவிட்சர்லாந்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அகரன் திலீபன் அவர்கள் 02-11-2011 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தமிழீழம், மீசாலை மேற்கைச் சேர்ந்த திலீபன்(சுவிஸ்), பிறேமினி(சுவிஸ்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும்,
ஆலோகன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற க.சி.கிருஷ்ணசாமி(இளைப்பாறிய தபாலதிபர்), தெய்வநாயகி(கிளி - இசை ஆசிரியை) மற்றும் சிவபாதம், இராசபூபதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்யன்- சுகன்யா(லண்டன்), சியாமளன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
இளங்கோ(சுவிஸ்), கானவேள்(சுவிஸ்), பாஸ்கர்(சுவிஸ்), சுதாகர்(கனடா), ஸ்ரீதர்(லண்டன்), சங்கர்(இலங்கை), சேகர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
கிஷோர், சரண் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூவுடல் Bern Bremgarten-Friedhof (Murtenstrasse 51, 3008 Bern) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 09-11-2011 புதன்கிழமை அன்று பிற்பகல் 13.00மணிமுதல் 15.00 மணிவரை நடைபெறும் ஈமக்கிரியைகள்/கூட்டுப் பிரார்த்தனையைத் தொடர்ந்து, மாலை 16.00 மணிக்கு Friedhof Bolligen/Ittigen, Ecke Sonnenrain/Kirchstrassse,3065 Bolligen என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலீபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41798896065
சியாமளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447854999098
இளங்கோ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764112021
கானவேள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788804597
பாஸ்கரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795337041
பாஸ்கர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41762846375
சுவிஸ் விபத்தில் தமிழ் சிறுவன் உயிரிழப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 07:31.59 AM GMT ]
சுவிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் யாழ். மீசாலையைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. பனிமூட்டம் காணப்பட்ட வேளையில் வீதியில் பாதசாரிக் கடவையின் ஊடாக நடந்து சென்ற சிறுவனை வேகமாக வந்த வாகனம் மோதியதையடுத்தே சிறுவன் உயிரிழந்துள்ளான் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
5 நாட்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஆகரன் எனும் சிறுவன் பாதசாரிகளுக்கான கடவையில் சென்று கொண்டிருந்தபோது பின்நோக்கி செலுத்தப்பட்ட பாரஊர்தி அவரை மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு ஆகரனின் தந்தை திலிபன் கூறுகையில் தனது மகனை வாகன ஓட்டுநர்கள் தெளிவாக கண்டு கொள்ளவேண்டுமென்பதற்காக ஒரேஞ் நிறத்திலான JACKET ஒன்றும் சிவப்பு நிறத்திலான சப்பாத்தும் வாங்கிகொடுத்தும் இவ்வாறு நடந்து விட்டது என கவலை தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையில் ஆகரனின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் விபத்து தொடர்பில் அந்நாட்டு பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கின்றது. (20min.ch)

No comments:

Post a Comment