Monday, October 3, 2011

கிழக்கு மாகாணத்தை போன்று வடக்கையும் பறித்துவிட அரசு கங்கணம்கட்டி நிற்கின்றது… தலைவர்கள் காட்டிய சரியான வழியில் சென்று ஒரு சரியான தீர்வைக் காண்பது அவசியமானது…!!! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்!

 September 26, 2011

தமிழ் மக்களது பூர்வீகக் காணிகள் இராணுவத்தாலும் சிங்கள மக்களாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தைப் போல் வடக்கையும் பறித்துவிட அரசு கங்கணம் கட்டி நிற்கிறது என்று தெரிவிக்கிறார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
 கோப்பாய்க் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு விழா நினைவுப் பேருரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.

கோப்பாய்க் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு விழா நினைவுப் பேருரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போதே அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:கோப்பாய் கோமான் வன்னிய சிங்கத்தை இளம் வயதில் காலன் கொன்று போயிருக்கா விட்டால் தமிழ் மக்களது தலைவிதி வேறுபட்ட விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.தமிழ் மக்களது தலைவிதியை சரியான முடிவுக்கு கொண்டு வந்திருக்கக் கூடிய பக்குவம் கோப்பாய்க் கோமானுக்கு இருந்திருக்கிறது.தமிழ்த் தேசிய உணர்வை வலுப்பெறச் செய்த தமிழரசுக் கட்சியில் மக்கள் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மக்களுக்குச் சேவை செய்யக் கூடிய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவ்வாறான மகான்களில் ஒருவர் தான் கோப்பாய் கோமான் வன்னியசிங்கம். தமிழர்களது ஆயுதப் போராட்டம் முகிழ்ந்ததுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால் பின்னர் அந்தப் போராட்டம் வழி தவறிச் சென்றுவிட்டது.ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது உள்வாங்கப்பட்டவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் விசுவாசமாக செயற்பட்டவர்கள்.சாத்வீகப் போராட்டத்தில் பங்குபற்றி எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையில் தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் நாம் உள்வாங்கப்பட்டோம்.
ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை. இன்று எமது காணிகள் இராணுவத்தால், சிங்கள மக்களால் அபகரிக்கப்படுகின்றன.எப்படி கிழக்குப் பறிபோனதோ அப்படி வடக்கையும் பறித்து விட அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. நாங்கள் காலம் தாழ்த்து கின்ற ஒவ்வொரு கணமும் எமது முடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் காலமாக இருக்கும்.எனவே எமது தலைவர்கள் காட்டிய சரியான வழியில் சென்று ஒரு சரியான தீர்வைக் காண்பது அவசியமானது என்றார்.

No comments:

Post a Comment