Tuesday, October 25, 2011

ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு

 [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 04:36.12 மு.ப GMT ]

நீங்கள் ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும் போது தவறுதலாக ஏதே பிழையுடன் அனுப்பினால் உடனேயே உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்து உங்கள் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள், அப்பொழுது தகவல் மட்டும் அதனுடன் தொடர்புடைய ஆவணத்தையும் அனுப்ப வேண்டும்.
அதற்கு பதிலாக நீங்கள் தகவலை மட்டும் அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான நேரத்தில் தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை பெறுவதற்கு என்றே ஜிமெயில் ஒரு சேவையை வழங்குகிறது.
அதை பயன்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்:
1. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் பெட்டியில் வலது பக்கத்தில் “Mail settings” கிளிக் செய்யவும்.
2. பிறகு “settings” ல் “Labs” என்றுள்ளதை கிளிக் செய்யவும்.
3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Sent” பக்கத்தில் உள்ள “enable” பொத்தானை கிளிக் செய்யவும்.
நீங்கள் தவறுதலாக அனுப்பும் பட்சத்தில், நீங்கள் செய்ய வேண்டியது Your message has been sent என்னும் வாக்கியத்துக்கு பக்கத்தில் உள்ள “Undo” லிங்க்கை கிளிக் செய்யவும். உங்களது மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment