Tuesday, October 25, 2011

ஸ்விட்சர்லாந்து கேபினட் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஊடகங்களின் விமர்சனம்

 (வீடியோ இணைப்பு)
ஸ்விட்சர்லாந்து நாட்டில் வரும் டிசம்பர் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கேபினட் தேர்தல்கள் நடந்து முடிந்தன.


இந்தத் தேர்தலில் வலது சாரி இயக்கமான மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது தொடர்ந்து புதிய கட்சிகளின் வரவு பாராளுமன்றத்தில் இனி ஆதிக்கம் செலுத்தும்.

மக்கள் கட்சியும் கீரீன்ஸ் கட்சியும் மக்களவையில் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசண்ட்டெட்டிவ்ஸ்) பெரும் தோல்வியைச் சந்தித்தது இதை தொடர்ந்து மற்ற மூன்று முக்கிய கட்சிகளும் தம் ஆதரவை இழந்தன.

லிபரல் கிரீன்ஸ் ஒன்பது இடங்களைப் பெற்றது. கன்சர்வேட்டிவ் டெமாக்கிராட்ஸ் கூடுதலாக நான்கு இடங்களைப் பெற்றது. ”மக்கள் கட்சி மீதுள்ள மயக்கம் தீர்ந்தது” என்றும் ”இந்தத் தேர்தலில் இக்கட்சிக்கு பலத்த அடி கிடைத்தது” என்றும் பத்திரிக்கைகள் விமர்சிக்கின்றன.

எந்தப் பத்திரிக்கையும் இந்தத் தேர்தல் முடிவுகளை முன்கூட்டிக் கணித்துச் சொல்லவில்லை கட்சியினரும் கணிக்கவில்லை. 30 சதவீதம் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் 3.6சதவீதம் குறைந்து 25.3 சதவீதமே கிடைத்தது. இதனால் மக்கள் கட்சிக்கு பாராளுமன்றத்தில் இரண்டாவது இடம் தான் கிடைக்கும் என்று அரசியல் நோக்கங்கள் கருதுகின்றனர்.

எனினும் போட்டியிட்ட அரசியல் கட்சிகளில் கூடிய வாக்கை சுவிஸ் மக்கள் கட்சியே பெற்றுள்ளது. சமூக ஜனநாயக கட்சி 17.6வீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்கு விகிதாசாரம் வருமாறு

Swiss People’s Party, SVP/UDC, 25.3 percent (-3.6)

Social Democratic Party, SPS/PSS, 17.6 (-1.9)

The Liberals FDP/PLR 14.7 (-3.0)

Christian Democratic People’s Party, CVP/PDC, 13.0 (-1.5)

Green Party, GPS/PES, 8.0 (-1.6)

Green Liberal Party, GLP/PVL, 5.2 (+3.8)

Conservative Democratic Party, BDP/PBD, 5.2 (+5.2)

Evangelical People’s Party, EVP/PEV, 3.2 (+0.6)

Ticino League, LdT, 0.6 (±0)
24 Oct 2011

No comments:

Post a Comment