Tuesday, October 4, 2011

குடிவரவுச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியுரிமை கோருவோருக்கு ஆப்பு வைக்கும் பிரித்தானியா!!


பிரித்தானியாவில் பத்தாயிரக்கணக்கான குடிவரவாளர்கள் நிரந்தரமாகவே குடியமரலாம் என்ற சட்டம் உள்துறை அமைச்சினால் அகற்றப்படுகின்றது.

241,000 வெளிநாட்டவர்களைக் கடந்த வருடம் மட்டும் இருக்க அனுமதித்த சட்டத்தினை அமைச்சர்கள் நீக்கவுள்ளனர்.

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த போது 51,000 ஆக இருந்த இத் தொகை தற்போது உயர்ந்துள்ளது.

5 வருடங்கள் ஒருவர் பிரித்தானியாவில் தொழில் புரிந்தால் மட்டுமே அவருக்கு அங்கு நிரந்தரமாக இருக்க முடியுமென்ற சட்டத்தினை நீக்குவதற்கு அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதில் குடியேற்றவாசிகள் தமது துணைகளுக்கு பிரித்தானியக் கடவுச்சீட்டை வழங்குவதற்கான உரிமையையும் தடைசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வருட முடிவில் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இத்திட்டங்களின் படி பிரித்தானியாவிற்கு வேலை அனுமதி பெற்றுவரும் வெளிநாட்டவர்கள் 5 வருடம் சட்டபூர்வமாக தங்கி வேலை செய்தாலும் தொடர்ந்தும் அவர்களால் அங்கு தங்கமுடியாதெனக் கூறப்படுகின்றது.

பிரித்தானிய அரசு அங்கு வரும் மக்களுக்கு எதிராக இல்லை என்றாலும் அவர்களை அங்கு தற்காலிகமாகத் தங்கவிடுவது நிரந்தரமாகத் தங்கும் நிலையை ஏற்படுத்தாது என பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமது தகுதியையும் தரத்தினையும் பொறுத்து அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புபவர்களுக்காகப் புதியதொரு சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

உயர் வருமானங்களைப் பெறும் வர்த்தகர்கள், லட்சாதிபதிகள் போன்றவர்கள் இதில் விதிவிலக்காவர். காரணம் இவர்கள் ஏனையவர்களுக்கும் வேலைகளை உருவாக்குகின்றார்கள் என்பது தான்.

அது போலவே ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் வசிக்க உரிமையுள்ளது. இவர்களால் பிரித்தானியா பாதிக்கப்படாது என கூறுகின்றனர்.
04 Oct 2011

No comments:

Post a Comment