Saturday, October 1, 2011

நெதர்லாந்தில் நீதிபதிகள் குழுவிற்கு எதிராக நெதர்லாந்து சட்ட விதிகளுக்கு அமைவாக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!!

நெதர்லாந்தில் 5 தமிழர்களின் வழக்கு விசாரணை தொடர்கிறது
[ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 05:28.14 AM GMT ]
நெதர்லாந்தில் செப்ரெம்பர் 15ம் திகதி ஆரம்பமான 5 தமிழ் மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
நேற்று இடம் பெற்ற இவ்வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்துவதற்காக தமிழர் தரப்பில் வாதிட்ட பிரபல வழக்கறிஞர் திரு.விக்ரர் கொப்பே அவர்கள் மிக ஆணித்தரமான பல விடயங்கள் முன்வைத்து வாதாடியிருந்தார்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்அமர்வில் பெருமளவில் தமிழ் மக்கள் வருகைதந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய விசாரணையின் போது  பல முக்கிய விடயங்களை எடுத்துக்காட்டி வாதிட்ட திரு. விக்ரர் கொப்பே அவர்களால் தனது கட்சிக்காரர்கள் தரப்பில் சில முக்கியமான தீர்மானங்களை முன்வைப்பதற்கு 30 நிமிடங்கள் மேலதிகமாக வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் 3பேர் அடங்கிய நீதிபதிகளால் முற்றாக நிராகரிக்கப்பட்டது.
இந்த முடிவை சற்றும் எதிர்பாராத திரு. விக்ரர் கொப்பே அவர்கள் தனது கட்சிக்காரர் தரப்பு நியாயங்களை முன்வைக்க 30 நிமிடங்கள் மேலதிகமாக தர மறுத்த முதல் நீதிபதிகள் குழு நீங்கள் தான் என்று கூறி அந்த நீதிபதிகள் குழுவிற்கு எதிராக நெதர்லாந்து சட்ட விதிகளுக்கு அமைவாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இத்தீர்மானத்திற்கு மற்றைய வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதன் காரணமாக  குறித்த வழக்கு விசாரணை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment