Thursday, September 15, 2011

எந்த மதமும் தனக்குப் பணத்தினால் அபிசேகம் செய் என்று கூறவில்லை

 (வீடியோ இணைப்பு)
இந்தக் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் பார்ப்பவர் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் மனங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ஆனால் சிந்திக்கத் தெரிந்த மனங்கள் கொண்ட மனிதர்களின் கண்களிலிருந்து கண்ணீர்தான் வடியும். அந்தளவுக்கு ஆலயங்களில் நடைபெறுகின்றது பணப் போட்டி.

அதாவது 10 தினங்கள் மஹோற்சவம் நடைபெறும் ஆலயம் ஒன்றை எடுத்துக் கொண்டால், அவ் ஆலயத்தில் 10 திருவிழாக்களையும் செய்வதற்கு 10 பேர் உபயகாரர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
அந்தப் பத்துப் பேரும் போட்டி போட்டுத் தங்களுடைய பணத்தின் வலிமையை காட்டும் ஒரு மைதானமாக அந்த ஆலயத்தை நினைத்து அங்கு பணப் போட்டியை ஆரம்பிப்பார்கள்.

இரண்டாம் திருவிழா செய்த உபயகாரர் நான்கு கூட்ட மேளம் பிடித்தால், நான்காம் திருவிழா செய்யும் உபயகாரர் எட்டுக் கூட்ட மேளம் பிடித்து அடிப்பார்கள்.

தவில்வித்துவான்களுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் தங்களது பணத்தைத் தாரைவார்த்துவிட்டு தலைநிமிர்ந்து போட்டியில் வெற்றி பெற்று விட்டதாகப் பெருமூச்சும் விடுவார்கள்.

என்ன செய்வது?

No comments:

Post a Comment