Saturday, September 17, 2011

தன்னாட்சி உரிமையே தமிழரின் தேவை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முழக்கம்

தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக்கொடுப்பதே இலங்கையில் பிரச்சினை தீர்வதற்கான ஒரே வழி என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை இலங்கை மற்றும் காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.

விவாதத்தில் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இல்போட் வடக்கு தொகுதி உறுப்பினர் லீஸ்கொட், இலங்கையில் உள்ள தமிழருக்கு நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகச் சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர் கட்சி உறுப்பினர் இயன் ஒஸ்ரின், கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் ஜொனாதன் லோட், அன்றூ கிரிபத்ஸ் உள்ளிட்ட பலரும், இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமைகளை வழங்குவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்று கூறினர்.

இந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய பிரிட்டிஷ் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், இலங்கையில் நடந்த போரின் போது இரு தரப்பினரும் புரிந்த போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் தாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.
17 Sep 2011

No comments:

Post a Comment