Thursday, September 15, 2011

அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்

[ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 07:43.56 PM GMT ]
அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர். துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.
சிங்கள ராவய தேசிய இயக்கம், பௌத்த பாதுகாப்புப் பேரவை, தம்மவிஜய மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களான கடும்போக்கு இனவாதிகள் பௌத்த பிக்குகள் தலைமையில் ஒன்று திரண்டு பள்ளிவாசலை இடித்தழித்துள்ளனர்.
பள்ளிவாசல் இடிக்கப்படும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிசார் இனவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிறுபான்மை மக்களின் வணக்கத்தலங்கள் பேரினவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அதே நேரம், அரசாங்கமும் இவ்விடயத்தில் பராமுகமாக இருக்கின்றதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment