Saturday, August 27, 2011

தூக்குத்தண்டனை விதிப்பதற்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்கள்! நிறுத்த இரண்டு தெரிவுகள் கைவசம்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 03:29.47 PM GMT ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 09ம் திகதி வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவர் என வேலூர்ச் சிறை அதிகாரிகள் அவர்களிற்கு நேரடியாத் தெரிவித்துள்ளனர்.
வேலூர்ச்சிறைச்சாலை ஜனாதிபதியின் ஆணையைப் பெற்றுள்ளது. எனவெ அவர்கள் தூக்குத் தண்டனைக்கு தேவையான ஆயத்தங்களைச் செய்வதற்கான “கறுப்புப் பிடிவிராந்து” என்ற செயற்பாட்டில் ஈடுபடுவர் என பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
இருந்தும் தற்போது இவர்களிற்கு இரண்டு தெரிவுகள் கைவசம் உள்ளன.
முதலாவதாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை அணுகி சட்ட மன்றத்தின் உதவியை இவ்விவகாரத்தில் நாடுவது.
மற்றையது கருணை மனுச் செய்து ஜனாதிபதி 11 ஆண்டுகளின் பின் அதனை நிராகரித்தது செல்லுபடியற்றது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது என்பதாகும்.
இக் கருணை மனு 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட பொழுதில் நாண்கு ஜனாதிபதிகள் பதிவியிலிருந்திருக்கிறார்கள். எனவே எதற்காக இவ்வளவு காலம் இந்த மனுவிற்குத் தேவைப்பட்டது என்பது ஒரு நியாயமான விவாதப் பொருளாகக் காட்டப்படும் இடத்தே இந்த வழக்கை விசாரிக்க சென்னை நீதிமன்றம் முன்வரலாம்.
முன்னரும் உச்சநீதிமன்றம் இவர்களின் மனுக்களை இரத்து செய்த போது ஒக்டோபர் 05, 1999ம் திகதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்படுவதற்கான திகதியாக சிறைச்சாலையால் நிர்ணயிமாகியிருந்தது. எனினும் ஜனாதிபதிக்கு கருணை மனுச் செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் முடிவு வரை அது இரத்து செய்யப்பட்டது.
1999ம் ஆண்டு இவர்களின் மரண தண்டனையை நிறுத்தக் கோரும் நடவடிக்கைகளிற்காக இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் மத்தியூஸ் பெர்னான்டஸ் மற்றும் பழ. நெடுமாறன் தலைமையில் 26 பேர் கொண்ட குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அக்குழுவின் செயற்பாட்டிற்காக தமிழகத்திலுள்ள தமிழுணர்வு மிக்க பெண்கள் தங்கள் நகைகளையே அன்பளிப்பாக அப்போது வழங்கியிருந்தனர். இருந்தும் தெரியாத சில காரணங்களிற்காக மேற்படி குழு செயலற்றுப் போய்விட்டது.
தற்போது சென்னை உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதியின் முடிவையெதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யும் அனுகூலம் இருந்தால் அதற்கான குழுவொன்றை பாரதிராஜா, சீமான், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து ஓரிரு நாட்களிற்குள் அமைப்பதே சாலச் சிறந்த முடிவாகும்.
அதேவேளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இது தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்திற்காக அணுகுவது அவரோடிணைந்த கட்சித் தலைவர்களின் கடமையாகும்.

No comments:

Post a Comment