Sunday, August 28, 2011

ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இம்மூவரின் தூக்குத்தண்டனை நடவடிக்கையை மத்திய அரசு தீர்மானித்தது - வழக்குவழக்கறிஞர் தடா சந்திரசேகரன்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 05:21.03 PM GMT ]
முதலமைச்சர் தலையிட்டால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை நிறுத்தலாம் என அவர்களது வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் லங்காசிறி வானொலிக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கைப் போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை நிறைவேற்றம் செய்தே ஆகவேண்டும் என்ற ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே 20 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த வழக்கை தூக்குத்தண்டனை என அறிவித்து, போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை திசைதிருப்புவதற்காகவும், மக்களின் ஆதரவை நசுக்குவதற்காகவும் மத்திய அரசு இத் தூக்குத் தண்டனை நடவடிக்கையை எடுத்துள்ளது என வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் மேலும் தெரிவித்திருந்தார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், செப்டம்பர் 9ம் திகதி தூக்கில் போடப்படுவர்,'' என, வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி கூறினார். மூன்று பேரும், வேலூர் சிறையில் இருக்கும் தூக்கு மேடையில், 10 நிமிட இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் போடப்படுவார்கள் என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தூக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்த ஏழு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்துவிட வேண்டும் என்று விதி உள்ளது. இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு, மரண தண்டனையை ரத்து செய்து தங்கள் உயிரை காப்பாற்றும்படி, தமிழக அரசுக்கு முறையீட்டு மனுக்கள் தனித்தனியாக அனுப்பி உள்ளனர். இந்த முறையீட்டு மனுக்கள், உடனடியாக தொலைநகல் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு, பதிவுத் தபாலில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன.
பின், வழக்கறிஞர் தடா சந்திரசேகரன், அவரது ஜூனியார் வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர்  கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறைக்கு சென்று முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்தனர். மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களில் அவர்களிடம் தனித்தனியாக கையெழுத்து பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment