Sunday, August 21, 2011

புகைப்படங்களின் அளவை குறைப்பதற்கு


தரவிறக்க சுட்டி


 [ வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2011, 04:40.23 மு.ப GMT ]
நாம் நம் நண்பர்களுக்கு நிறைய புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் ஒவ்வொரு புகைப்படத்தின் அளவையும் குறைத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்வது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும்.
இதற்கு உதவுவதற்காக தான் ஒரு சின்ன மென்பொருள் உள்ளது. 2 எம்.பிக்கும் குறைவான இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
நிறுவியவுடன் தோன்றும் விண்டோவில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்து தேவையான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
புகைப்படம் தேர்வு செய்தவுடன் அதன் பிரிவியு பார்க்க அந்த புகைப்படத்தை தேர்வு செய்ய அதன் ப்ரிவியு கீழே தெரியும்.
இப்போழுது புகைப்படம் எந்த போர்மட்டுக்கு வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். அதைப்போலவே புகைப்பட டைட்டிலுக்கு எந்த பெயர் வைக்க வேண்டுமோ அந்த பெயரை தட்டச்சு செய்யுங்கள். புகைப்படத்திலும் வாட்டர்மார்க் கொண்டுவரலாம்.
இப்போழுது புகைப்படம் எந்த அளவில் வேண்டுமோ அந்த அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலும் தம்ப்நெயில் வேண்டுமானாலும் அதனையும் தேர்வ செய்து கொள்ளலாம். தம்ப்நெயில் படத்திற்கும் வாட்டர்மார்க் அமைத்துக் கொள்ளலாம்.
எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தவுடன் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இறுதியில் நீங்கள் எங்கு சேமித்து வைத்துள்ளீர்களோ அங்கு சென்று பார்த்தீர்களேயானால் அங்கு அளவு குறைக்கப்பட்ட உங்கள் புகைப்படங்கள் இருக்கும்.

No comments:

Post a Comment