Friday, July 8, 2011

வணக்கம் மனிதன் தங்களுக்கு எனது தங்கை பற்றி நான் அனுப்பியிருந்த கடிதம் தொடர்பாக மேலு சில முக்கிய விடயங்கள்.

1 ) நீங்கள் இன்றைய (jaffna news , athirvu, tamillcnn ) இணைய செய்தியில் தர்ஷனா பற்றி வந்த செய்திகளை பார்த்திருப்பீர்கள்.

அதில் அவர்கள் முதல் வெளியிட்ட செய்தியில் தர்சனாவின் வங்கி கணக்கு இலக்கத்திற்குதான் 1 கோடியே 40 லட்சம் போட்டிருப்பதாக சொன்னவர்கள் இப்போது உண்டியல், western union , money gram , அது இது என்று பிதற்றுவதை வைத்து உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் இப்படியான (jaffna news , athirvu, tamillcnn ) போன்ற இணையத்தளங்களின் பித்தலாட்டங்களை.

நான் வங்கியில் அப்படியான தொகை எதுவும் இல்லை என ஆதாரத்துடன் நிரூபித்தவுடன் எப்படி செய்தியை திசைதிருப்ப நினைக்கிறார்கள்.
2 ) நாங்கள் எங்கள்பக்க நியாயங்களை கூற முற்படுகையில் உங்களுக்கு பணம் தந்து நாங்கள் செய்தி போடசொல்வதாக தங்கள் பிழைகளை திசைதிருப்ப முனைவதற்கு இடமளிக்ககூடாது.

3 ) இன்னுமொரு விடயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் இப்படியான செய்திகளை வெளியிடுவது ஒரேயொரு நபர் மட்டும்தான். அவர் தன்னிடம் மற்றைய நபர்கள் பற்றிய ஆதாரங்கள் இருப்பது உண்மைஎன்றால் தன்னையும் மற்றைய நபர்களையும் வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?

தங்கை பிழை செய்தால் அதற்கு வழக்கு போட்டு அதை தகுந்த ஆதாரத்துடன் நிருபித்து பின்னர் அதை வெளிப்படுத்தவேண்டும். அதைவிடுத்து இப்படி பொய்யான தகவல்கள்மூலம் வாசகர்களை திசைதிருப்பவும் தங்களின் இணையத்தளங்களை வளர்க்கவும் முற்படக்கூடாது.

4) யார் என்ன செய்திகளை மெயிலுக்கு அனுப்பினாலும் ஆராயாமல் செய்திகளை வெளியிடுவது jaffna news , athirvu, tamillcnn போன்ற இணையத்தளங்களே. நான் கூறிய அதாவது தங்கையின் வங்கி கணக்கு தொடர்பாக இந்த இணையத்தளங்கள் கூறிய 1 கோடியே 40 லட்சம் என்ற தொகை பொய்யானது அதை என்னால் வங்கி அறிக்கை மூலம் எப்போதும் நிருபிக்கமுடியும்.

உண்மைகள் நீண்டகாலத்திற்கு உறங்குவதில்லை என்பதை இப்படியான இணையத்தளங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
நன்றி.
Kandiah Sutharsan
sutharszan@gmail.com

எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம்.

நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிர்வு, jaffna news, tamil cnn செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன்.


1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்?

ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார்.

அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நான் சொன்னேன் நீங்கள் காசு கொடுக்கமுதல் என்னையோ எங்கள் குடும்பத்தையோ விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போ தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் எங்களை தொடர்புகொள்ரிங்க என்று. நான் சொன்னது சரியா தவறா?
2 ) அவர் என்ன நோக்கத்திற்காக அந்த காசு கொடுத்ததென்று சொன்னாரெண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அதாவது எனது தங்கையை எங்கள் குடும்பம் யாருக்கும் தெரியாமல் லண்டனுக்கு மாணவர் விசாவில் எடுப்பதற்காக அந்த காசை அனுப்பினாரெண்டு சொல்கிறார். அப்படியெண்டால் அவர் செய்த காரியம் சரியானதா?

எங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் அவர் யுவதியை லண்டனுக்கு எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதை எங்களுக்கு தெரிந்து செய்ய முயற்சி செய்திருக்கலாமே?

3 ) இன்று எங்கள் வீட்டிற்கு cid பொலிசார் வந்து விசாரித்தார்கள். அவர்கள் commercial bank கணக்கை check பண்ணியபோது தங்கையின் கணக்கில் 10 லட்சத்துக்கும் குறைவான தொகையே இருந்திருக்கிறது.. எனவே குறித்த நபர் அந்த கணக்கிற்கு தான் 15 லட்சம் போட்டதாக எப்படி சொல்கிறார்.. மேலும் 1 கோடியே 40 லட்சம் அந்த கணக்கில் போடப்பட்டுள்ளதாக எப்படி அவர்கள் செய்தியில் போட முடிந்தது? அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? இல்லை ஏனெனில், அந்த கணக்கிலக்கத்தில் உள்ள காசு சம்பந்தமாக நீங்கள் சாவகச்சேரி cid போளிசரிடமோ அல்லது commercial bank மனகேரிடம் விசாரித்து பாருங்கள் உண்மை என்னவென்று உங்களுக்கு உங்களுக்கு தெரியவரும்.

4 ) நன்றாக ஆராயாது போட்ட இந்த செய்தியால் இன்று எங்கள் அம்மா, அப்பா ஏன் எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம். ஒரு செய்தியை போடும்போது எல்லா பக்கமும் விசரித்திருக்கவேண்டும். எங்கள் அம்மா அப்பாவுக்கு எதாவது நடந்தால் அவர்களால் அவங்க உயிரை திருப்பி தர இயலுமா?

5 ) எதாவது தவறு நடந்திருந்தால் முதலில் வழக்கு போட்டு அதன்மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் செய்தியை பிரசுரிப்பது வேறு விடயம். அனால் அவர்கள் உங்கள் செய்திப்பக்கத்தில் போட்டது சரியாவென சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒருவரின் தனிப்பட்ட காதல் தோல்விக்காக ஏன் அவர் இந்த செய்தியை போட்டிருக்ககூடாது. தனிப்பட்ட அவரின் பிரச்னையை அவர் இப்படி கேவலமான முறையில் செய்தியாக பயன்படுத்தி எங்கள் குடும்பத்தினை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

எனவே நீங்களாவது இந்த செய்தியை நன்கு விசாரித்து வெளிவிடவேண்டுமேன்று கேட்டு கொள்கிறேன்.

Kandiah Sutharsan
sutharszan@gmail.com

அதிர்வு, தமிழ் சீ என் என், ஆகிய இரு இணையத்தளத்தை நடத்தி வருபவரான கண்ணனின் நன்பரே பணத்தைக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது?

குடும்பப்பிரச்சனையை இணையம் இருக்கிறது என்பதற்காக எழுதுவது நியாயமா.?

அன்பு நன்பர்களே நாங்கழும் ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான் எமதுதாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடாதே எனவே பெண்ணுக்காகக் குரல் கோடுப்போம்
07 Jul 2011

No comments:

Post a Comment