Wednesday, June 22, 2011

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்

[ புதன்கிழமை, 22 யூன் 2011, 12:08.16 PM GMT ]
யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system  என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer  (கண்டுபிடிப்பாளர்)  மற்றும் royal academic enterpreneur ship  (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்)  ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான Sheffield  பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியற் கல்வியை (B.Eng.Electronic Engg) 2007 ம் ஆண்டு பூர்த்தி செய்து இங்கிலாந்து ரீதியான தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தச் சாதனைக்காக இவருக்கு Sie William Siemen Medal  பதக்கம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை உலகளாவிய ரீதியில் திறமை வாய்ந்த இங்கிலாந்து cambrige  பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று தொடர்ந்தார். இங்கு முதலில் Master Of Physicology in Electronic Engg  மற்றும் Doctor Of Physicology in Electronics Engg  என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார்.
பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது ஆராய்ச்சி கண்டு பிடிப்புக்கள் இங்கிலாந்து பத்திரிகைகளிலும் பல்வேறு ஆங்கில இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு Patients Inventer  என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இவர் தற்போது கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.
இவரது கண்டு பிடிப்பான radio real time tagging system  ஆனது பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
இவரது கண்டுபிடிப்பான inteligent wireless passive sensor technology system  விமான நிலையத்தில் பயனிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது.
இவரது கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் பாதுகாப்பு சேவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment