Tuesday, May 24, 2011

இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து

கடந்த சனியன்று வந்த இந்த விடயமும் நெடியவன்,ராமச்சந்திரா போன்றோர் மீது ஒல்லாந்து மேற்கொண்டுவரும் விசாரணைகளும் இலங்கையில் இன்னமும் அமைதி திரும்பவில்லை என்றே விளக்குகின்றன!!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 01:49.06 AM GMT ]
 இலங்கையில் எதிர்வரும் காலங்களில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாதென நெதர்லாந்து அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
நெதர்லாந்தில் கோடைக் கால விடுமுறை நெருங்கியிருப்பதை முன்னிட்டே பிரஸ்தாப அறிவித்தல் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நெதர்லாந்துப் பிரஜைகள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் அவ்வறிவித்தல் மூலமாக  நெதர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் கோடை காலத்தை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்கின்றமைக்கு தயார் ஆகின்றனர்.
அதனை முன்னிட்டு தமது நாட்டுப் பிரஜைகள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளப்  பாதுகாப்பான நாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற நாடுகள் பற்றிய விபரப் பட்டியலொன்றை நெதர்லாந்து வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தமது நாட்டுப் பிரஜைகள்  இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரு வருடங்கள் ஆகி விட்ட போதிலும் புலி ஆதரவாளர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர். இலங்கையில் புதிய தாக்குதல்கள் இனி மேல் நடக்காது என்று உத்தரவாதம் தர முடியாது என்றும் அவ்வெச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment