Thursday, May 26, 2011

கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்பியவர் விமானநிலையத்தில் கைது

[ வியாழக்கிழமை, 26 மே 2011, 01:21.29 AM GMT ]
கட்டாரில் கடந்த 5 வருட காலமாக தொழில்புரிந்து விட்டு நேற்று காலை நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசமான கடுக்காமுனை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அழகிப்போடி அழகேசன் (38 வயது) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.
5 வருடங்களாக கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு நேற்றுறு காலை நாடு திரும்பிய வேளையில் விமான நிலையத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது கைது தொடர்பாக  குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர்.

Employee who served in the Qatar was arrested by the CID at BIA
[ Thursday, 26 May 2011, 04:00.35 AM GMT +05:30 ]
Employee who served in Qatar for past five years had been arrested at the BIA by the police officers of Crime Investigation Department.
According to the sources, he is a resident of Kadukkamunnai area in Batticaloa district and father of one.
However now he is in the CID custody and they are carrying out further investigation.
The family members of the victim launched a complained to the Batticaloa district Tamil National Alliance (TNA) MP Ariyanenthiran this regard.

No comments:

Post a Comment