Friday, May 6, 2011

கனடாத்தமிழரும் அவர்களின் அரசியல் சூன்யமும்!

கனடாத்தமிழரும் சாதாராண இனத்துவேசமுள்ள மனிதரே!!இதன் மூலம் இழப்புகளைத்தவிர முன்னேற்றம் எதனையும் அடைய முடியாது.பதவியில் தமது உறவுகளை அமர்த்திய மகிழ்வுடன் தாழ்வதைத்தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது.மக்களுக்கு நலம் தரும் இனசார்பற்றோரை தேர்ந்தெடுப்பது மூலமே தமிழினம் முன்னேறலாம்.அதிக தமிழர் உள்ள இடத்தில் தமிழன் வெல்வது சாதாரண விடயமே,ஆனால் இதன் மூலம் பெரும் பான்மை சமூகத்திடமிருந்து நாம் விலகுவதுடன் சிறுபான்மை கட்சியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது என்பதே கண்கூடு.இதை இலங்கையில் அறுபது வருடகாலமாக பார்த்தும் கிணற்றுத் தவளையாகவே தமிழன் இருப்பது வேதனையே!
இளையோர்கள் தொடர்ந்தும் பொறுப்புடன் உழைக்க வேண்டும் - ராதிகா சிற்சபைஈசன் (வீடியோ இணைப்பு)
தமிழ் இளையோர்கள் தொடர்ந்தும் பொறுப்புடன் உழைக்க வேண்டும் என கனடா தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய ராதிகா சிற்சபைஈசன் தமிழ்வின் தளத்திற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.

05 May 2011

உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்த மங்கையர் திலகம் கனடாவின் ராதிகா சிற்சபேசன்
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 08:43.34 AM GMT ]
கனடா நாட்டின் பாராளுமன்றத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசன் இந்த வெற்றியின் மூலம் அவர் உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்துள்ளார். அவர்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பெருமையடைகின்றது.
மேலும் மேற்குலக நாடு ஒன்றின் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முதல் தமிழ் பேசும் உறுப்பினர் என்ற பெருமையையும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்னும் அந்தஸ்தையும் அவர் அடைந்திருக்கின்றார். எனவே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அவரைப் பாராட்டுகின்றது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தி;ன செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும், இயக்கத்தி;ன சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க இரண்டு வழிகள் மிகவும் அவசியமானவையாகும். அவற்றுள் ஒன்று அந்த இனம் அல்லது சமூகம் தான் வாழும் நாட்டில் வர்த்தகத் துறையில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அரசியலில் கால்பதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறவும் வேண்டும்.
இந்த கூற்றுக்களை நாம் கனடியத் தமிழர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ் மக்கள் ஏற்கெனவே வர்த்தகத் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். அவர்களுக்கென்று தனியான ஒரு வர்த்தக சம்மேளனமும் உள்ளது. அடுத்தபடியாக அவர்கள் அரசியல் கால்பதிக்கத் தொடங்கியுள்ளார்கள். அதில் ராதிகா என்ற வெற்றியாளர் தற்போது எம் முன்னால் நிமிர்ந்த தலையுடன் நிற்கின்றார்.
ராதிகா சிற்சபேசன் கனடாவில் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக தற்போது எழுச்சி பெற்றுள்ளார். அவரது தந்தையும் தாயாரும் கனடாவில் நமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்ளார்கள். அவர்கள் கற்பிக்கும் வார இறுதி தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் நிதி உதவி வழங்கி நடத்தி வருகின்றது.
தனது தந்தை தமிழ் மொழியை கற்பிக்கும் பாடசாலையில் தமிழைக் கற்ற ராதிகா பின்னாளில் தனது தந்தைக்கு உதவியாகவும் அதே பாடசாலையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார். தமிழர் பண்பாட்டை வெளிக்காட்டும் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றம் கண்டவர் ராதிகா. இவற்றை நாம் உற்று நோக்கும் போது அவரது தமிழ்மொழி மீதான ஆர்வமும் அக்கறையும் புலப்படுகின்றது.
அத்துடன் தமிழர் கலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் கொண்ட ஒரு தமிழ்ப் பெண் கனடாவின் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று தனது தொகுதி மக்களுக்காகவும் தனது இனத்து மக்களான தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவுள்ளார் என்பதை எண்ணுகின்றபோது நமது மனம் பூரிப்படைகின்றது.
உலகத் தமிழ் மக்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக தோற்றமளிக்கும் ராதிகா சிற்சபேசன் தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டி இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசனைப் பாராட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment