Wednesday, April 6, 2011

பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்!

தமிழ்ச் சினிமாவின் பிரபல நடிகை சுஜாதா அவர்கள் சென்னையில் காலமானார்.


அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள்.

1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம். கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
06 Apr 2011
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை சுஜாதா, இன்று சென்னையில் காலமானார். 1952ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த சுஜாதாவுக்கு இறக்கும் போது வயது 59ஆகும்.

பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுஜாதா பல படங்களில் தனது முத்திரையை பதித்திருந்தார். அவள் ஒரு தொடர்கதை, வாழ்ந்து காட்டுகிறேன்,  விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் சுஜாதா நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தார். அந்தமான்காதலியில் சிவாஜியுடனும் அவர்கள் படத்தில் கமலஹசனுடனும் சுஜாதாவின் நடிப்பு மறக்க முடியாதது.
கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை.
சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.

No comments:

Post a Comment